தங்கல் நடிகையை பாலியல் தொந்தரவு செய்த மர்ம நபர்!!

தங்கல் படம் நடிகையான் சயீரா வாசிம் சமீபத்தில் விமானத்தில் பயணம் செய்துள்ளார். அப்போது பின்னால் இருந்தவர்கள் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கண்ணீருடன் வீடியோவை வெளியிட்டார்.

இது சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சையானது. ஏர்விஸ்ட்ரா விமான நிறுவனம் சயீராவிடம் மன்னிப்பு கேட்டது. இந்நிலையில் நடிகையின் புகார் அடிப்படையில் சம்பவத்திற்கு காரணமான நபரை கைது செய்துள்ளனர்.

அவர் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் விகாஸ் சக்தேவ் என்பவராம். 36 வயதாகும் இவர் மீதான குற்றச்சாட்டை அவரது மனைவி மறுத்துள்ளார். இதில் அவர் என் கணவர் சமூகத்தில் ஒரு நல்ல இடத்தில் இருக்கிறார்.

எங்கள் நெருங்கிய உறவினரின் இறுதி சடங்கிற்காக தான் டெல்லியிலிருந்து மும்பைக்கு விமானத்தில் பயணம் செய்தார். மேலும் அவருடன் அவரது அம்மாவும் இருந்தனர்.

சோகமான மனநிலையில் இருக்கும் போது இப்படி அவர் மீது பழி சுமத்துவது அதிர்ச்சியாக இருக்கிறது. என் கணவர் தவறாக நடந்து கொண்டார் என்றால் ஏன் அவரை சயீரா தாக்கவில்லை.

கூச்சல் போட்டிருக்கலாம். அலாரம் பட்டனை அழுத்தியிருக்கலாம். 2 மணி நேரம் கழித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டது ஏன். இது விளம்பரத்திற்காக அவர் செய்துள்ளார் என கூறியுள்ளார்.

சயீரா மைனர் என்பதால் அவருக்கு சமூகவலைதளங்களில் ஆதரவுகள் பெருகி வருகிறது.

Capturedgvxd