தமிழகத்தில் 90 வயது மூதாட்டியை அவரது மகள் சுடுகாட்டில் தனியாக விட்டு தலைமறைவான சம்பவம் நெஞ்சை உருக்கும் வகையில் அமைந்துள்ளது.
தமிழகத்தின் கலிங்கநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த 90 வயது கருப்பாயி என்ற மூதாட்டியை சுடுகாட்டுக்குக் கூட்டி வந்து உட்கார வைத்து அவரது மகள், டீ வாங்கிக் கொண்டு வருவதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.
இந்த நிலையில் குறித்த மூதாட்டி தமது மகளின் வருகைக்காக உணவு தண்ணீர் இன்றி ஒரு வாரகாலம் காத்திருந்துள்ளார்.
தனது மகள் ராமாத்தாள் இங்கு உட்கார வைத்துச் சென்றதாகவும், தனது மகள் வருகிறாளா என போவோர் வருவோரை அவர் கேட்டப்படியே இருந்துள்ளார்.
மட்டுமின்றி தள்ளாத வயதில் எழுந்து நடக்கக்கூட முடியாத கருப்பாயி, தமது மகள் விட்டுச் சென்ற இடத்திலேயே அமர்ந்திருந்துள்ளார்.
தனது கணவர் இறந்த பின்னர் வீட்டு வேலை செய்து தனது குழந்தைகளை காப்பாற்றியதாக கூறும் மூதாட்டி கருப்பாயி, முதலில் மகன் வீட்டில் இருந்ததாகவும், பின்னர் மகன் தன்னை மகள் வீட்டில் விட்டுச் சென்றதாகவும் கண்ணீரோடு கூறியுள்ளார்.