தாய் வீடு சென்ற தனயனை வெட்டிச் சாய்த்தனர் தந்தையும் சகோதரர்களும். இதில் காயமடைந்த இளம் குடும்பத்தலைவர் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் கொடிகாமம் கெற்பேலியில் இடம்பெற்றது.
தலையில் கத்திவெட்டுக்கு காயமடைந்த குறித்த நபரை கொடிகாமம் பொலிஸார் மருத்துவமனையில் சேர்த்து விசாரணைகளை மேற்கொண்டனர். அல்லாரை வடக்கைச் சேர்ந்த பொன்னையா நிமலன் (வயது 24) என்பவரே காயமடைந்தவராவார்.