போக்குவரத்து விதிமுறையினை மீறிய சாரதிகள் மூவருக்கு 59 ஆயிரம் ரூபா தண்டம்!

போக்குவரத்து விதிமுறையினை மீறி வாகனம் செலுத்திய சாரதிகள் மூவருக்கு 59ஆயிரம் ரூபா தண்டம்  பருத்தித்துறை நீதிவான் நளினி கந்தசாமியால் விதிக்கப்பட்டது.வல்வெட்டித்துறை பொலிஸாரினால் கைதான மூவருக்கே இவ்வாறு தண்டம் விதிக்கப்பட்டது.

மதுபோதையில் எந்தவித ஆவணமும் இன்றி வாகனம் செலுத்திய இலந்தைகாடு பகுதியினை சேர்ந்தவருக்கு 27ஆயிரமும், குடிபோதையில் வருமாவரிப்பத்திரம், சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி செலுத்திய கரணவாய் பகுதியினை சேர்ந்தவருக்கு 22ஆயிரம் ரூபாவும், குடிபோதையில் வண்டி ஓட்டிய சாரதிக்கு 10ஆயிரமும்  ரூபா
அபராதமும் விதிக்கப்பட்டது.

மூன்று வழக்குகளும்  கடந்த திங்கட்கிழமை (11) தனித்தனியே எடுத்து கொள்ளப்பட்ட போது குறித்த அபராதம் விதிக்கப்பட்டது.இதேவேளை மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய இருவருக்கு தலா 7ஆயிரத்து 500 ரூபா அபராதம்  யாழ்ப்பாணம் நீதிவான் எஸ்.சதீஸ்தரனால் விதிக்கப்பட்டது.

அத்துடன் குறித்த இருவரையும் 50மணித்தியாலங்கள் சமூதாய சீர்திருத்தத்திற்கு உட்படுத்த கட்டளையும் வழங்கினார்.யாழ்ப்பாணம் போக்குவரத்து பொலிஸாரினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கைதான இருவரும் மறுநாள் திங்கட்கிழமை மன்றில் முற்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

5a3089ca79cb7-IBCTAMIL