வருங்கால முதலமைச்சருக்கு வணக்கம் சொன்னதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தமையால் சபையில் சிரிப்பொழி எழுந்தது.
வடமாகாண சபையின் 112ஆவது அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற போது முதலமைச்சர் வரவு செலவு திட்டத்தின் ஆரம்ப உரையை நிகழ்த்தினார்.
உரை நிகழ்த்த ஆரம்பிக்கும் போது , முதலமைச்சர் அவர்களுக்கும் , அவைத்தலைவர் அவர்களுக்கும் , அமைச்சர்களுக்கும் , உறுப்பினர்களுக்கும் என விழித்து வணக்கம் சொன்னார்.
அதன் போது குறுக்கிட்ட அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் உங்களுக்கு நீங்களே வணக்கம் சொல்லுகின்றீர்களா ? என நக்கலான தொனியில் சிரிப்புடன் கேட்டார்.
அதற்கு , இது முதலாவது வடமாகாண சபையின் இறுதி வரவு செலவு திட்டம். அதான் வருங்கால முதலமைச்சருக்கும் வணக்கம் சொன்னேன் என சிரித்தவாறு பதிலளித்தார்.