பெண்களுக்கு அடிக்கடி ஏற்படும் இடுப்பு வலியை போக்க இதோ குறிப்பு.!

இடுப்பு வலி இல்லாத பெண்களே கிடையாது என்று தான் கூறவேண்டும். இடுப்பு வலி குறிப்பிட்ட வயதிற்கு பிறகு அனைத்து பெண்களையும் பாதிக்கும் ஒன்றாகும். இந்த இடுப்பு வழியில் இருந்து தப்பிக்க இந்த குறிப்பில் ஒரு குறிப்பை பயன்படுத்தலாம்.

5a309de99e325-IBCTAMILவெள்ளைப்பூண்டு, பொடுதலை இலை, சுக்கு மற்றும் மிளகு கீழ் உள்ள வாறு பயன்படுத்தினால் இடுப்பு வலி மற்றும் இடுப்பு பிடிப்பு குணமாகும். பொடுதலை இலை கைப்பிடியளவு எடுத்து வெள்ளைப் பூண்டு ஏழு, மிளகு 15, சுக்கு ஒரு பாக்குஅளவு சேர்த்து அரைத்து வாயிலிட்டு வெந்நீர் சாப்பிடவேண்டும். இவ்விதமாக 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் இடுப்பு பிடிப்பு குறையும்.

பெண்களுக்கு அடிக்கடி ஏற்படும் இடுப்பு வலியை போக்க இதோ குறிப்பு.!

மேலும், கட்டுக்கொடி இலை மற்றும் பால் மூலம் எவ்வாறு இடுப்பு வலி குறையும் என்று பார்ப்போம். கட்டுக்கொடியிலையைப் பாலில் அரைத்து நெல்லிக்காயளவு எடுத்து ஒரு டம்ளர் பாலுடன் கலந்து 2 வேளை குடித்து வந்தால் இடுப்புவலி குறையும். இந்த இரு குறிப்பில் உங்களால் முடிந்த குறிப்பை நீங்கள் பயன்படுத்தி உங்கள் இடுப்பு வழியை குறைத்துகொள்ளலாம்.