தமிழில் வரும் சீரியல்களை விட ஹிந்தியில் டப் செய்து வரும் சீரியல்களுக்கு மக்கள் இடத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.எனவே ஹிந்தி சீரியலில் எது நல்ல வரவேற்பு கிடைக்கிறதோ அந்த சீரியலை தமிழில் டப் செய்து ஒளிப்பரப்படுகிறது.
அப்படி பிரபல ரிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று தான் இனிய இருமலர்கள். இந்த சீரியல் மக்கள் இடத்தில் பெரும் இடம் பிடித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் அதில் நடிக்கும் பிரக்யா. இவருக்கு ஹிந்தியில் மட்டுமில்லாது தமிழிலும் ரசிகர் பட்டாளம் ஏராளம்.
சமீபத்தில் பிரக்யா அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு காச நோய் உள்ளாதாக கூறியுள்ளார். இருந்தும் கூட அவர் எந்த ஒரு ஒய்வும் எடுத்துக்கொள்ளாமல் தொடர்ந்து சீரியல்களில் நடித்துவருகிறார்.
நாளுக்குநாள் அவர் உடல் நிலை மிகவும் மோசமாகிக்கொண்டே போகிறதாகவும் கூறியுள்ளார்.
இதனால் ரசிகர்கள் அவரை நினைத்து வருந்துவதோடு, அவர் நடிக்கவில்லை என்றால் அந்த சீரியலை பார்க்கமாட்டோம் என்றும் கூறிவருகின்றனர்.