சீனாவை சேர்ந்த பெண்மணி ஒருவரின் கண் இமையில் 100 ஒட்டுண்ணிகள் இருப்பதை அவதானித்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சீனாவை சேர்ந்த Ms Xu என்ற பெண் கடந்த இரண்டு ஆண்டுகளாக கண் அரிப்பு பிரச்சனையால் அவஸ்தைபட்டு வந்துள்ளார். இவரது இரண்டு கண்களும் சிவப்பு நிறமாக மாறியுள்ளது.
கண் அரிப்பு பிரச்சினை தாங்க முடியாமல் குறித்த பெண் மருத்துவர்களை நாடியுள்ளார். அவரது கண்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது கண்களில் 100 ஒட்டுண்ணிகள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். கண்களில் ஒட்டுண்ணி பாதிப்பு ஏற்படுவது வழக்கம்தான் ஆனால் இந்த அளவிற்கு எண்ணிக்கை அதிகரிக்காது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் கடந்த 5 வருடங்களாக தான் பயன்படுத்திய தலையணையை துவைக்காமல் பயன்படுத்தி வந்துள்ளார். நீண்ட காலமாக தலையணையை துவைக்காமல் பயன்படுத்தியமையால் கண்களில் அலர்ஜி மற்றும் வெண்படல பாதிப்பால் ஒட்டுண்ணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் இதற்கு உரிய சிகிச்சை எடுத்து கொண்டால் விரைவில் குணமாகும் எனவும் கூறியுள்ளனர்.