ஸ்ரீலங்காவில் அமைக்கப்பட்ட உலகில் மிக உயரமான கிறிஸ்மஸ் மரம் கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
உலக கின்னஸ் பதிவுக் குழுவினால் இதற்கான அறிவிப்பு ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் கொழும்பு காலி முகத்திடலில் இந்த உயரமான கிறிஸ்மஸ் மரம் நிர்மாணிக்கப்பட்டது.
236 அடி உயரம் கொண்ட இந்த கிறிஸ்மஸ் மரம் சீனாவில் அமைக்கப்பட்ட 55 மீற்றர் உயரம் கொண்ட கிறிஸ்மஸ் மரம் பதிவுசெய்த சாதனையை முறியடித்தது.
இந்த மரத்தை அமைப்பதற்கான அனுமதியை ஸ்ரீலங்கா துறைமுக அமைச்சர் அர்ஜுன ரணதுங்க வழங்கியிருந்ததோடு இப்பணிகளில் சுயேட்சையாகவும் பலர் இணைந்து கொண்டிருந்தமை விசேட அம்சமாக விளங்கியது.
எவ்வாறாயினும் இந்த கிறிஸ்மஸ் மரம் நிர்மாணப் பணிகள் இடம்பெறுகின்ற தருணத்தில் இதற்கு சிலர் எதிர்ப்பு வெளியிட்டமையும் குறிப்பிடத்தக்கது.