சென்னை: அவளைப் பாறேன் கண்ணழகி… அவனுக்கு தோள்கள் சும்மா அழகை கூட்டும் என்பார்கள். கவர்ச்சியான உதடுகள் சிலருக்கு இயற்கையாகவே அமைந்து விடும். 12 ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு உறுப்புகளும் தனித்தனி கவர்ச்சியை தருகின்றன.பெண்ணின் ஜாதகத்தில் லக்கினத்தில் சந்திரன் இருந்தால் அனைவரையும் கவரும் அழகுடையவள் பெண் ராசியாக இருந்தால் அவள் அழகுக்கு நிகர் எவரும் இல்லை எனலாம்.
அந்தப் பெண்ணைப்பார்த்து அழகான ராட்சஷியே என்று பாடுவார்கள். ஜோதிடம் என்றாலே ராசி பலன் கூறுவது மட்டுமல்ல ஒருவரின் அழகைப் பார்த்தே என்ன ராசி என்றும் நட்சத்திரம் என்றும் கணிக்கலாம்.
இன்ன ராசிக்காரர்கள் இப்படிப்பட்ட குணாதிசயங்களுடன் இருப்பார் என்றும் கூறலாம்.
அழகான முகத்தோற்றம்
பெண்ணின் லக்னத்தில் குரு வட்டமான அழகான முகம்.பருத்த உடல் வாகுடையவர்கள். சுருள் சுருளான தலைமுடி,பெரிய முன்னழகுடையவள்.
பெண்ணின் ஜாதகத்தில் லக்கினத்தில் சந்திரன் இருந்தால் அனைவரையும் கவரும் அழகுடையவள் பெண் ராசியாக இருந்தால் அவள் அழகுக்கு நிகர் எவரும் இல்லை எனலாம்.
வசீகரிக்கும் முகம்
லக்னத்தில் சுக்கிரன் பிறரை வசீகரிக்கும் தன்மையுடையவள். அங்க லட்சணம் பொருந்திய உடல் அழகுடையவாள். கலைநயமுடைய முன்னழகுடையவாள்.12 ராசிக்காரர்களுக்கும் எவை எவை அழகாக இருக்கும் என பார்க்கலாம்.
லக்னத்தில் சுக்கிரன் பிறரை வசீகரிக்கும் தன்மையுடையவள். அங்க லட்சணம் பொருந்திய உடல் அழகுடையவாள். கலைநயமுடைய முன்னழகுடையவாள்.12 ராசிக்காரர்களுக்கும் எவை எவை அழகாக இருக்கும் என பார்க்கலாம்.
அழகான ராட்சஷிகள்
ராசிமண்டலத்தில் முதலாவதாக இருக்கும் மேஷ ராசிக்காரர்கள் அழகான ராட்சஷிகள். இந்த ராசியில் பிறந்த ஆண்களும் அழகானவர்கள்தான்.
பெண்கள் கவர்ச்சியாக இருப்பதுடன், செதுக்கியது போன்ற முக அம்சங்களை கொண்டிருப்பார்களாம். அவர்களது புருவம், மூக்கு, தாடை, வாய் போன்ற அனைத்தும் ஈர்க்கும் விதமாக இருக்குமாம். பார்வைக்கு வெகுளி போல காணப்பட்டாலும் எதையும் கூர்ந்து கவனித்து செயல்படும் ஆற்றல் கொண்டவர்கள்.
சங்குக்கழுத்தழகு
ரிஷபராசிக்காரர்கள் காளையின் அடையாளங்களைக் கொண்டவர்கள். இயற்கையாகவே உடல் வலிமையை பெற்றவர்கள். இவர்களது உடலில் மிகவும் கவர்ச்சிகரமான அம்சம், தடித்த, நீண்ட, நேர்த்தியான கழுத்து. கொண்டவர்கள்.ரிஷப ராசியில் பிறந்தவர்கள் எல்லோரையும் வசியப்படுத்தக்கூடிய அளவிற்கு அழகான தோற்றத்தைக் கொண்டிருப்பார்கள். நடுத்தர உயரம் கொண்டவர்கள் என்றாலும் கம்பீரமான தோற்றம் இருக்கும். நீண்ட கழுத்தும், அகன்ற மார்பும், விரிந்த தோள்களும, அழகான அங்க அமைப்புகளால் அமைந்திருக்கும்.

ஒளிரும் தோற்றம்
மிகவும் துடிப்பான, உற்சாகமிக்கவர்களான மிதுன ராசிக்காரர்களின் ஆளுமை குணத்தை போலவே துடிப்பான உடல் அம்சம் அவர்களது நிறம் ஆகும். எவ்வளவு பெரிய கூட்டத்தில் நின்றாலும், தங்களது நிறத்தால் ஒளிர்ந்து காணப்படுவார்கள்.எத்தனை வயதானலும், என்றும் இளைமையாக இருப்பார்கள். உயரமான உடலமைப்பு இருந்தாலும் ஒல்லியான தேகமே இருக்கும். எப்பொழுதும் சுறுசுறுப்பாக சுற்றி வரும். இவர்களுக்கு பரந்த நெற்றியும், பிறரை வசீகரிக்க தக்க தனித்தன்மையும் இருக்கும்.

கூர்மையான மூக்கழகு சாப்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் கடக ராசிக்காரர்கள் உண்ணும் உணவை வேண்டி விரும்பி உண்பார்கள். உணவை நேசிக்கும் அளவிற்கு அவர்களது உடல் அமைப்பிலும் கவனம் செலுத்துவார்களாம்.இவர்களது உடலமைப்பில் மிகவும் சுவாரஸ்யமிக்க பகுதி வயிறு. நடுத்தர உயரம் கொண்ட இவர்கள் சிறு வயதில் ஒல்லியாக இருந்தாலும் வயது ஏற ஏற உடல் பெருத்து உருண்டு திரண்ட அங்க அமைப்புகளுடன் குண்டாக காணப்படுவார்கள்.
இவர்களுக்கு கூர்மையான மூக்கும், உயர்ந்த நாசியும், அழகான உதடுகளும், அழகான வில் போன்ற புருவங்களும் அமைந்திருக்கும்.
மிருதுவான கூந்தல்
சிங்கத்தின் அடையாளமாக விளங்கும் சிம்ம ராசிக்காரர்கள் கூந்தலுக்கு கூடுதல் கவனம் அளிப்பார்களாம். நீண்ட மிருதுவான கூந்தலினால் வசீகரிக்கும் தனித்துவம் இவர்களிடத்தில் இருக்கிறதாம். உருண்டையான முகமும், அழகான கண்களும் கொண்டிருப்பார்கள். அழகான கண் இமைகள் இருக்கும். கண்களாலேயே பல கதைகள் பேசும் ஆற்றல் கொண்டவர்.
இயற்கை அழகு
அனைத்திலும் கச்சிதமாக திட்டமிட்டு செயல்படும் கன்னி ராசிக்காரர்கள், அதிக கவனம் செலுத்தி மேனியை பாதுகாப்பதில் வல்லவர்களாம். சருமத்தில் எந்த குறையும் இல்லாதவாறு பார்த்துக் கொள்வது இவர்களின் சிறப்பம்சம். இவர்களின் தோற்றத்தை வைத்து வயதை கூறிவிட முடியாது. நடுத்தரமான உயரமும், இயற்கையான அழகும் பெற்றிருப்பார்கள்.
அலங்கார பிரியர்கள்
துலாம் ராசிக்காரர்கள் இயற்கையாகவே அழகுடையவர்களாக இருந்தாலும் அத்துடன் செயற்கை அழகையும் சேர்த்து மிகவும் அழகாக தோற்றமளிப்பார்கள்.
ஆடை, அணிகலன்கள் அணிவதிலும் தலையை விதவிதமாக அலங்காரம் செய்து கொள்வதிலும் அலாதி பிரியம் கொண்டவர்கள். மூக்கு தண்டு உயர்ந்தும், துவாரங்கள் அகன்றும் இருக்கும். வளைவு சுழிவுடன் கூடிய கட்டுடல் அமைப்பை கொண்ட ராசிக்காரர்கள் உடலின் வடிவமைப்பில் அக்கறை காட்டுவார்களாம்.
கவர்ச்சிகரமான உதடுகள்
கவர்ச்சியான, உணர்ச்சி மிகுந்த விருச்சிக ராசிக்காரர்கள் அனைவரையும் ஈர்க்கும் மற்றும் வசீகரிக்கும் உடல் அம்சங்களை கொண்டவர்.
அவர்களின் உதடு, எதிரே நின்று பேசுபவர்களை நிலைகுழையச் செய்துவிடுமாம். நடுத்தர உயரமும், அகன்ற நெற்றியும், அமைதியான உருவ அமைப்புடன் தோன்றினாலும், தேளின் விஷயத்தை போன்று தன்னுடைய பேச்சால் மற்றவர் மனதை புண்படுத்தி விடுவார்கள். மாநிறமும் மேல் புருவங்கள் சற்று உயர்ந்தும் காணப்படும். நடை , உடை பாவனைகளில் ஒரு கம்பீரமான தோற்றம் இருக்கும்.
அழகான உடலமைப்பு
வித்யாசமான செயல்கள் மூலம் தனித்து நிற்கும் தனுசு ராசிக்காரர்கள், நல்ல உயரமும் கூர்மையான மூக்கும், கனிவான பார்வையும் கொண்டவர்கள். பெரும்பாலோர் நல்ல உயரமாகவே இருப்பார்கள். அவர்களது உடல் அமைப்பு அழகாகவும், வலிமை கொண்டதாகவும் இருக்குமாம்.
அழகான கால்கள்
தலைமை குணம்படைத்த மகர ராசிக்காரர்கள் நீண்ட மற்றும் அழகான கால்களை கொண்டவர்கள். மிருதுவான கால்களுக்கு அதிகம் கவனம் செலுத்துவார்களாம்.
நடுத்தர உயரம் உடையவர்களாகவும் கழத்தும் தலையும் சற்று நீண்டதாகவும் இருக்கும். புருவங்கள் அடர்ந்து வளைந்து காணப்படும். காதுகள் நீண்டும், தோள்கள் விரிந்தும் அமைந்திருக்கும். இவர்களின் எலும்புகளும் மூட்டி பாகங்களும் எடுப்பாக தோற்றம் அளித்தாலும் அழகானதாக இருக்கும்.
அழகான பாதங்கள்
கும்ப ராசிக்காரர்களுக்கு புருவங்கள் அழகாகவும், வளைந்து, நெற்றி நடுப்பக்கம் சாய்ந்து, உதடுகள் மூடியும், மூக்கு அகன்றும் காணப்படும். எப்பொழுதும் முகத்தில் புன் சிரிப்போடு சரளமாக பேசும் குணமுடையவர்களாக இருப்பார்கள். கழுத்து சிறுத்தும், பற்கள் உறுதியற்றும் இருக்கும். மிருதுவான மெல்லிய பாதம் கும்பம் ராசிக்காரர்களுக்கு சிறப்பானதாம். கண்களால் வசீகரம்
கண்களால் வசீகரம்
மீன ராசிக்காரர்கள் கம்பீரமான தோற்றத்துடன் சாதாரண உயரத்தை விட சற்று உயரம் குறைந்தவர்களாகவும், ஏர் நெற்றியுடனும் இருப்பார்கள்.
நீண்ட மூக்கும், சிறிய குவிந்த உதடுகளும், வரிசையான பற்களும் காணப்படும். மாநிறமும், மிருதுவான கைகளும் அமைந்திருக்கும். பார்வையால் வசீகரிக்கும் சிறப்பம்சம் கொண்ட மீன ராசிக்காரர்கள், கண் பார்வையிலேயே ஒருவரின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதில் கெட்டிக்காரர்களாம்.