திருமணமான சில மணி நேரத்தில் மணப்பெண் இறந்த சம்பவம் ஒன்று நியூசிலாந்தில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவமானது நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரில் இடம்பெற்றுள்ளது.26 வயதான Jameika Mccarthy Harford என்னும் பெண்ணுக்கு திருமண ஏற்பாடுகள் செய்து திருமணத்தை நடத்தினர். குடும்பத்தில் பின்னர் திருமணம் நடந்து சில மணி நேரத்திற்குள்ளேயே குறித்த பெண் பக்டீரியா நோய் தொற்று காரணமாக மூளைக்காய்ச்சல் ஏற்பட்டு மரணத்தை தளுவியுள்ளார்.இது குறித்து அவரின் கணவர் கருத்து வெளியிடும் போது;எங்களை விட்டு அவள் பிரிந்து சென்றது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எங்கள் எல்லோரையும் விட்டு மிக விரைவாக அவள் சென்றுவிட்டாள். இது மிகவும் கடினமான சூழல். என தெரிவித்துள்ளார்.மேலும், இது குறித்து குறித்த பெண்ணின் குடும்பத்தினர் கூறும் போது; Jameika மிகவும் மகிழ்ச்சியுடன் இந்த திருமணத்தில் கலந்து கொண்டார். அவள் மிகவும் பாசம் நிறைந்தவள். ஒரு சிறந்த காதலியாகவும் மகளாகவும் தங்கையாகவும் இருந்த அவள் எங்களை விட்டு சென்றுவிட்டாள். என தெரிவித்தனர்.இந்த இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்ட ‘The Auckland Regional Health Service’ எனும் அமைப்பு “Meningococcal” என்னும் நோயின் தாக்கத்தினால்தான் Jameika இறந்துள்ளார் என்று உறுதி செய்துள்ளனர்.மேலும், இந்நோய் தொற்று உள்ளவர்களிடம் மணிக்கணக்கில் நேரம் செலவிடும்போது அவர்களுக்கும் இந்த நோய் தொற்றக்கூடும் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. எனவே Jameika-வின் குடும்பத்தினருக்கு இந் நோய் தொற்று ஏற்பட்டுள்ளதா என தீவரமாக கண்காணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.