கொழும்பிலுள்ள உணவகம் ஒன்றில் வழங்கப்பட்ட பற்றுச்சீட்டு தொடர்பில் உள்ளூர் ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டுள்ளன.கொள்வனவு செய்யப்பட்ட உணவுக்காக வழங்கப்பட்ட பற்றுச்சீட்டு தொடர்பில் பல சர்ச்சைகள் எழுந்துள்ளன.குறித்த பொருட்களுக்காக அந்த பற்றுச்சீட்டில் பதிவிடப்பட்டிருந்த விலையே அதற்கு காரணமாகும்.3 சொஸேஜ் ரோல்ஸ், 3 மரக்கறி பனிஸ் மற்றும் 4 மீன் பனிஸ் கொள்வனவு செய்தமைக்காக 3908.40 ரூபாய் அறவிடப்பட்டுள்ளது. அதற்கு சேவை கட்டணமாக 300 ரூபாய் அறவிடப்பட்டுள்ளது.பொதுவாக இதனை பெரிய உணவகங்களில் கொள்வனவு செய்திருந்தாலும்இவ்வளவுபெரியதொகைஅறவிடப்பட்டிருக்காது.
சில இடங்களில் கட்டுப்பாட்டு விலை இல்லாமையினால் இவ்வாறு அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.Take Away எனப்படும் உணவுகளை பார்சலாக வழங்கும் உணவகத்தில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. எடுத்து செல்லும் உணவுகளுக்காக எதற்காக சேவை கட்டணம் அறவிடப்பட்டதென்பதே தற்போதைய மிகப்பெரிய சிக்கலாகியுள்ளது.எனினும் இவ்வாறான உணவகங்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாத நிலையே காணப்படுவதாக சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.