இலங்கை பந்து வீச்சை துவம்சம் செய்த இந்தியா!ரோஹித் சர்மா இரட்டைச் சதம்!!

இந்தியக் கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் ரோஹித் சர்மா தனது 3வது இரட்டை சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடிவரும் அவர், 151 பந்துகளில் 11 சிக்ஸர்கள், 13 பவுண்ரிகள் அடங்களாக இரட்டை சதம் அடித்தார்.மொஹாலியில் நடைபெற்றுவரும் இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தீர்மானித்தது.அதன்படி முதலாவதாக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, சர்மாவின் அதிரடியின் துணையின் மூலம் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 392 ஓட்டங்களை குவித்தது.ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய ரோஹித் சர்மா, 208 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்காது களத்தில் இருந்தார். ஆட்டம் தொடர்கின்றது