கண்டி தலதா மாளிகை வான்பரப்பில் நடப்பது என்ன?

இந்திய விமானப்படையின் தலைமை அதிகாரி எயார் சீப் மார்ஷல் பிரேந்திர சிங், இன்று முற்பகல் கண்டி தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.அவர் சென்றிருந்த உலங்குவானூர்தியில், இயந்திர கோளாறு ஏற்பட்டதன் காரணமாக வேறு வானூர்தியில் அவர் புறப்பட்டுச் சென்றுள்ளார்.இலங்கை விமானப்படைக்கு சொந்தமான உலங்குவானூர்தி கண்டி அஸ்கிரிய மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வந்திருந்த போது, தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். அப்போது அவர் பயணித்த இந்திய விமானப்படைக்கு சொந்தமான உலங்குவானூர்தியிலும், இயந்திர கோளாறு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.