கொழும்பிலிருந்துச் சென்றவர் சென்னை விமானநிலையத்தில் வைத்து கைது!

கொழும்பிலிருந்துச் சென்ற ஒருவர் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருப்பதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சட்டவிரோதமான முறையில் 494 கிராம் தங்கம் கடத்தி வந்த நிலையிலேயே, குறித்த நபர் சென்னை விமான நிலைய சுங்க பிரிவினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

24 வயதான இளைஞர் ஒருவரே நேற்று முன்தினம் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 494 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், சிங்கப்பூர் மற்றும் டுபாய் ஆகிய நாடுகளில் இருந்த சட்டவிரோதமான முறையில் தங்கம் கடத்தி வந்தவர்களும் நேற்று முன்தினம் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருப்பதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2_04257