ஜெயலலிதா மரணம்.. சசிகலாவிடம் விசாரணை நடத்த தீபா கோரிக்கை…

_94834557_ec787176-dc09-4bd6-b9a8-862b316e3258

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா மற்றும் அவரது உடனிருந்தவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என தீபா தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழக அரசு அமைத்துள்ள விசாரணை கமிஷன் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்தார் தீபா.

நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன் ஜெயலலிதா மரணம் தொடர்பாக மருத்துவர்களிடம் விசாரணை நடத்தியது. இதனைத்தொடர்ந்து ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவுக்கு விசாரணை கமிஷன் நோட்டீஸ் அளித்திருந்தது.

நோட்டீஸை தொடர்ந்து விசாரணை ஆணையத்தின் முன்னிலையில் ஆஜரான தீபா நீதிபதி ஆறுமுகசாமி எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தார். இதையடுத்து தொடர்ந்து ஜெயலலிதா மரணம் தொடர்பான பல்வேறு நபர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளார் நீதிபதி ஆறுமுகசாமி.