விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களான ஏழு பேருக்கு அனுராதபுர சிறப்பு மேல் நீதிமன்றம், தலா 8 ஆண்டுகள் கரூழியச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
வில்பத்து சரணாலயத்தில் 2006ஆம் ஆண்டு கிளைமோர் குண்டுத் தாக்குதல் ஒன்றை நடத்தி 7 பேரைக் கொலை செய்தமை உள்ளிட்ட 8 குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றம்சாட்டப்பட்ட ஏழு பேரும், நீதிமன்றத்தில் தமது குற்றங்களை ஏற்றுக் கொண்டதை அடுத்து, அனுராதபுர சிறப்பு மேல் நீதிமன்ற நீதிபதி நேற்று அவர்களுக்கு தலா 8 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.