சிறிலங்கா அதிபரின் அவசர கோரிக்கையை ஏற்று, 75 ஆயிரம் மெட்றிக் தொன் யூரியா உரத்தை சிறிலங்காவுக்கு அனுப்பி வைக்க பாகிஸ்தான் பிரதமர் இணங்கியுள்ளார்.
சிறிலங்காவில் யூரியா உரத்துக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு குறித்து, அமைச்சரவையில் ஆராயப்பட்டது.
இதையடுத்து, பாகிஸ்தன் பிரதமருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அவசர உதவியைக் கோரியிருந்தார்.
இதையடுத்து உடனடியாக 75 ஆயிரம் மெட்றிக் தொன் யூரியா உரத்தை முன்னுரிமை அடிப்படையில் சிறிலங்காவுக்கு அனுப்பி வைக்க பாகிஸ்தான் பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளார்.