திருச்செந்தூர் முருகன் பிரகாரம் இடிந்து வீழ்ந்து பெண்ணொருவர் பலி!

திருச்செந்தூர் முருகன் வள்ளி குகைக்கு அருகில் உள்ள வெளி மண்டப பிரகாரம் இடிந்து வீழ்ந்ததில் பெண் ஒருவர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

5a321c7c928d0-IBCTAMILதிருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாட்டுக்காக கலந்து கொள்வது வழமை.தினமும் வழிபாடு முடித்து விட்டு வள்ளி மண்டப பிரகாரத்தில் பக்தர்கள் ஓய்வெடுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அவ்வாறு ஓய்வெடுக்கும் வேளையில் வெளிமண்டப பிரகாரம் உடைந்து விழுந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவத்தில் பெண் ஒருவர் பலியாகியுள்ளதாகவும் மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் எனவும் சந்தேகங்கள் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஆலய வாயில்கள மூடப்பட்டுள்ளதாக தகவல்கள வெளியாகியுள்ளன.தற்போது ஜயப்பன் யாத்திரைகளின் வருகை ஆரம்பித்துளள நேரத்தில் இவ்வாறு நடந்துள்ளமை பக்தர்களுக்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.