இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட விமானத்திற்கான எரிபொருள் தரமற்றது என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்ட ஆய்வின் மூலம் இது தரமற்ற எரிபொருள் என தெரியவந்துள்ள போதும், இரண்டாம் நிலை பரிசோதனைகள் செய்யப்பட்டு வருவதாக பெற்றோலிய வள அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்துள்ளார். இருப்பினும் விமானங்களுக்கான தரமற்ற எரிபொருளை சந்தையில் விநியோகிக்கப்படவில்லை எனவும், 10,000 மெட்றிக் தொன் எரிபொருள் தொடர்பில் தற்போது இரண்டாம் கட்ட பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதன் முடிவுகளைப் பொறுத்து குறித்த எரிபொருள் தொகைப் பற்றி முடிவு எடுக்கப்படும் எனவும் குறித்த எரிபொருள் இந்தியன் எண்ணெய் நிறுவனத்திடம்(IOC) இருந்து கொண்டுவரப்பட்டது என வெளிவரும் தகவல்களை நிராகரிப்பதாகவும் அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.