குஜராத் மாநிலம் அகமதாபாத் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று வாக்களித்தார். குஜராத் மாநிலத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இரண்டாம் கட்டமாக 93 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடையும் என அதிகாரிகள் தரப்பில் தெரிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு காரணமாக குஜராத் மாநிலத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே கடும் போட்டி நிலவிவருகிறது. முன்னதாக நேற்று கட்சி ஆலோசனை கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குஜராத் சட்டமன்ற தேர்தலில் முடிவில் காங்கிரஸ்காரர்களுக்கு உற்சாக செய்தி காத்திருப்பதாக தெரிவித்தார்.