ஜெயலலிதா மறைவுக்கு பிறகு காலியாக இருந்த RK நகர் தொகுதிக்கு டிசம்பர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
ஆளும் கட்சியான அதிமுக இரட்டை இலை சின்னத்தை வைத்து ஒட்டு கேட்டு வரும் வேளையில்., குக்கரை வைத்து RK நகர் மக்களை தன் பக்கம் தினகரன் வளைத்துள்ளார்.
தினகரனுக்காக மக்கள் கூடுகிறார்களோ.., இல்லையோ.., குக்கருக்காக பெண்களின் கூட்டம் அலைமோதுகிறது.
ஒரு காலத்தில் பெண்கள் ஆரவாரமாக அதிமுகவிற்கு பிரச்சாரம் செய்ததை யாராலும் மறக்க முடியாது.
வேட்பாளர் யார் என்று கூட பார்க்காமல்., ஜெயலலிதா என்ற ஒற்றை சொல்லிற்கும்., இரட்டை இலை என்ற சின்னத்திற்கும்., மக்கள் கண்ணை மூடிக்கொண்டு ஓட்டு போட்ட காலம் மலை ஏறிவிட்டது.
அவற்றை எல்லாம் குக்கர் என்கின்ற ஒரே விஷயத்தில் தினகரன் தூக்கி சாப்பிட்டு விட்டார் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
கருத்து கணிப்பு முடிவுகளும் தினகரனுக்கு ஆதரவாக வந்து கொண்டுள்ளது. இதனை அறிந்த எடப்பாடி இது குறித்து ரிப்போர்ட் அளிக்க உளவுத்துறைக்கு உத்தரவிட்டிருக்கிறார்.
உளவுத்துறையும் தீவிரமாக களத்தில் இறங்கி செயல்பட்டுள்ளது. அப்போதுதான்., சில உண்மை நிலவரங்கள் தெரிய வந்ததாம்.
கருத்து கணிப்பு முடிவுகள் தினகரனுக்கு ஆதரவாக வர வேண்டும் என்பதற்காக சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் பல கோடிகளை செலவு செய்துள்ளாராம்.
RK நகரில் தினகரனுக்குத்தான் வெற்றி வாய்ப்பு உள்ளது என்று தினமும் கருத்து கணிப்பு முடிவுகள் வெளிவரும் வகையில் அவர் திட்டமிட்டு வேலை செய்துள்ளாராம்.
அது மட்டும் அல்லாமல்., RK நகர் தொகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் ஒன்றுக்கு இரண்டு குக்கர்களை தாராளமாக விநியோகம் செய்ய சொல்லி ஆதரவாளர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளாராம்.
இந்த தகவல்களை உளவுத்துறையின் மூலம் அறிந்த எடப்பாடி., குக்கர் அனைத்தும் ஓட்டுகளாக மாறிவிட்டால் என்ன செய்வது என்று அதிர்ச்சி அடைந்துள்ளாராம்.
ஜெயிக்க போவது யாரு..? என்று பொறுத்திருந்து பார்ப்போம்..