ஒன்று முடிய மற்றொன்று; ரயில் பயணிகள் கவனத்துக்கு!

ரயில்வே துறையில் கடந்த சுமார் ஒரு வாரமாக இடம்பெற்ற வேலை நிறுத்தம் முடிவுற்று 24 மணிநேரம் முடிவடைவதற்குள், ரயில்வேயின் மற்றொரு தொழிற்சங்கம் வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளது.

1177414906trainரயில்வே தொழில்நுட்ப முகாமைத்துவ உதவி அதிகாரிகள் சங்கமே இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையில் இன்று (14) காலை இறங்கியது. இச்சங்கத்தின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து, ஏற்கனவே நடைபெற்ற வேலை நிறுத்தத்தில் பங்குபெறாத மேலும் சில தொழிற்சங்கங்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

முந்தைய வேலை நிறுத்தம் குறித்து நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, தமது சங்க உறுப்பினர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் தீர்வுகள் வழங்கப்பட்டிருப்பதாகக் கூறியே இவ்வேலை நிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எனினும், அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டிருக்கும் ரயில்வே சேவையில் வேலை நிறுத்தம் செய்யப்பட முடியாது என போக்குவரத்து பிரதியமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.