யாழ்ப்பாணத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் செயற்பாடு குறித்து மக்கள் மத்தியில் அதிகம் பேசப்படுகிறது.
வீதியில் தவறவிடப்பட்ட பத்தாயிரம் ரூபாவினை பொலிஸ் அதிகாரியினால், அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் விழுந்திருந்த பணத்தை எடுத்த பொலிஸ் கான்ஸ்டபிள் எஸ். இருதயராஜா அதனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் ஒப்படைத்திருந்தார்.
இந்த சம்பவம் நேற்று நடைபெற்ற நிலையில், அது தொடர்பில் முறைப்பாடு செய்ய பணத்தை தவறவிட்டவர் இன்று பொலிஸ் நிலையம் சென்றுள்ளார்.
தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த வேளையில், பொறுப்பதிகாரியினால் பத்தாயிரம் ரூபா உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பொதுவாக மக்களிடம் பணத்தினை தட்டிப்பறிக்கும் பொலிஸ் அதிகாரிகள் உள்ள நிலையில், இருதயராஜாவின் செயற்பாடு குறித்து பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.