-
மேஷம்
மேஷம்: பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டா கும். வாகன பழுதை சரி செய்வீர்கள். மனைவி வழி யில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். இரவு 8.42 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் தடை களை தாண்டி முன்னேறும் நாள்.
-
ரிஷபம்
ரிஷபம்: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர் கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அதிகார பதவியில் இருப்பவர் களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்க மாவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.
-
மிதுனம்
மிதுனம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர் கள். நட்பால் ஆதாயம் உண்டு.
அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். புதுமை படைக்கும் நாள். -
கடகம்
கடகம்: எதிர்ப்புகள் அடங்கும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னை தீரும். உத்யோ கத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.
-
சிம்மம்
சிம்மம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் பாச மழை பொழிவார்கள். அரசு காரியங்கள் உடனே முடியும். சொத்து பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக் கும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். தைரியம் கூடும் நாள்.
-
கன்னி
கன்னி: கணவன்-மனைவிக் குள் அன்யோன்யம் பிறக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப் பார்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.
-
துலாம்
துலாம்: இரவு 8.42 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். யாரும் உங்களை புரிந்து கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். மாலைப் பொழுதிலிருந்து நிம்மதி கிட்டும் நாள்.
-
விருச்சிகம்
விருச்சிகம்: குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங் கள் வந்து நீங்கும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக் கும். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. வியாபாரத்தில் போட்டி களை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். இரவு 8.42 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழை வதால் நிதானம் தேவைப்படும் நாள்.
-
தனுசு
தனுசு: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பழைய சொந்தங்கள் தேடி வருவார்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோ கத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். அனுபவ அறிவால் வெற்றி பெறும் நாள்.
-
மகரம்
மகரம்: சாதிக்க வேண்டு மென்ற எண்ணம் வரும். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. மற்றவர் களுக்காக சில பொறுப்பு களை ஏற்பீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
-
கும்பம்
கும்பம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன சில வேலைகள் இன்று முடியும். உறவினர்கள் ஒத்துழைப் பார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக் கும். புதிய திட்டங்கள் நிறைவேறும் நாள்.
-
மீனம்
மீனம்: இரவு 8.42 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து அதிகம் யோசிப்பீர்கள். புது முதலீடுகளை தவிர்க்கவும். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் மறை முக நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். மாலையிலிருந்து எதிர்ப்புகள் அடங்கும் நாள்.