பிரான்சில் பள்ளிப் பேருந்தின் மீது பயணிகள் இரயில் மோதியதில் நான்கு மாணவர்கள் பலியாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரான்சின் Millas பகுதியில் உள்ள இரயில்வே கிராசிங்கில் பள்ளிப் பேருந்து இரண்டு தடுப்புகளுக்கு நடுவே சிக்கிக் கொண்டதால், தண்டவாளத்தில் வந்த பயணிகளின் இரயில் பேருந்தில் பயங்கரமாக மோதியது.
இதில் பேருந்து இரண்டாக நொறுங்கியுள்ளது, பேருந்தில் இருந்த 4 மாணவர்கள் பலியாகியிருப்பதாகவும், அதை தவிர்த்து 19 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், இதில் 7 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இரயிலில் இருந்த 25 பயணிகளுக்கு எந்த ஒரு காயங்களும் ஏற்படவில்லை எனவும் இரயில் 60 மைல் பர் ஹவர்ஸ் வேகத்தில் வந்து மோதியதால், பேருந்து நிலைகுலைந்து போயுள்ளதாக அங்கிருக்கும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த கோர விபத்தில் சிக்கிய பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் 11 முதல் 15 வயது தான் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் தனது டுவிட்டர் பக்கதில், இந்த விபத்தில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்திற்கு மிகுந்த வருத்ததை தெரிவித்து கொளவதாக குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி விபத்து நடந்து இடத்திற்கு பிரான்ஸ் போக்குவரத்து துறை அமைச்சர் Elizabeth Borne விரைந்துள்ளார். அதைத் தொடர்ந்து விபத்தில் சிக்கியிருப்பவர்கள் மீட்கும் பணியில் பொதுமக்களும் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.