40 ஆண்டுகளுக்கு பின்னர் மனைவியை பார்க்க வந்த கணவன்: நெகிழ்ச்சி சம்பவம்

தமிழகத்தில் மனைவியுடன் தகராறு செய்துவிட்டு சென்ற கணவன் 40 ஆண்டுகளுக்கு பின்னர் வீடு திரும்பிய சம்பவம் நடந்துள்ளது.

கும்பகோணத்தின் முருக்கங்குடி முதல் கட்டளை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, இவரது மனைவி அஞ்சம்மாள், இவர்களது பிள்ளைகள் கண்ணப்பன், காந்தி.

இருவருக்கும் கடந்த 45 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது, அடிக்கடி சண்டை போட்டுவிட்டு கிருஷ்ணமூர்த்தி வெளியில் சென்று விடுவாராம், பின்னர் சில நாட்கள் கழித்து வீடு திரும்புவாராம்.

இதேபோன்று கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் அஞ்சம்மாளிடம் சண்டையிட்டு வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை.

இதனால் மனமுடைந்த அஞ்சம்மாள் தனியாக கஷ்டப்பட்டு பிள்ளைகளை வளர்த்துள்ளார்.

இரு பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்து பேரக்குழந்தைகளும் பிறந்துவிட்டனர்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் பெரியவர் ஒருவர் தாடியுடன் அஞ்சம்மாள் வீட்டு வாசல் முன்பு நின்றுள்ளார்.

இவரை அடையாளம் கண்ட அஞ்சம்மாள் வீட்டில் தங்கவைத்துள்ளார்.

ஜோசியர் சொன்னது பலித்துவிட்டதாகவும், வீடு திரும்பினாலும் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.