பிரிட்டனை சேர்ந்த 22 வயதான Scarlet Goodrich. என்னும் பெண் அவுஸ்திரேலியாவின் Fruit Farm-இல் கடந்த 15 மாதங்களாக வேலை பார்த்து வந்துள்ளார். இந் நிலையில் அரிய வகை மூளை நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சில நாட்களிற்கு முன் அவரது உடலில் முக்கிய பகுதிகள் பாதிக்கப்பட்டதாக உணர்ந்த குறித்த பெண் கடுமையான முதுகுவலிக்கு ஆளாகி மருத்துவமனையை நாடியுள்ளார். அங்கே சோதனை செய்த மருத்துவர்கள் கூறுகையில் இவரது உடலில் ஒருவித நச்சு பொருள்ள கலந்திருப்பதாகவும் அதனால் மூளை வீக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் அந்த நச்சு பொருளானது பூனைகளின் உடலில் அதிகளவில் கலந்திருக்கும் என குறிப்பிட்டுள்ளனர்.
இது குறித்து அவரது நண்பர் ஒருவர் கூறுகையில் பூனை மீது அதிக பாசம் கொண்டவர் எனவும் அதனுடன் விளையாடுகையில் தவறுதலாக கீறல் ஏதும் பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளார். தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதனால் அதற்கு நன்கொடையாக 3000 பவுன்ட் கேட்டு ஆரம்பிக்கப்பட்ட வங்கி கணக்கில் தற்போது வரை 2315 பவுன்ட் நன்கொடையாக கிடைக்கப்பெற்றுள்ளது.