கிறிஸ்துமஸ்சை முன்னிட்டு ஜேர்மனய விமான நிறுவனமான “ஏர்பஸ்” விமான நிறுவனம் வித்தியபசமான முறையில் ஜேர்மனிய மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து மக்களை சந்தோசப்படுத்தியுள்ளது.
உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான “ஏர்பஸ் ஏ380” என்னும் விமனமானது குறித்த ஏர்பஸ் விமனா நிறுவனத்திற்கு சொந்தமானதாகும். குறித்த விமானத்திலேயே இன்று ஜேர்மனிய மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
குறித்த விமானம் சோதனை பயணத்தின்போது ஜேர்மனிய வான் பரப்பில் பறந்துள்ளது. அந்த விமானம் பயணத்தை தொடங்கிய இடத்திலியே பயணத்தை முடித்துள்ளது. எனினும் அதில் உள்ள சுவாரசியம் என்னவென்றால் விமானம் பயணித்த காட்சிகள் கிறிஸ்துமஸ் மரம் போன்ற தோற்றத்தை வானில் ஏற்படுத்தியுள்ளமை ரேடாரில் பதிவாகியுள்ளது.
இது குறித்து விமான நிறுவனம் கூறுகையில் இந்த பயணத்தின்போது விமானத்தில் பயணிகள் எவரும் பயணம் செய்யவில்லை மேலும் இது சோதனை ஓட்டத்தின் போது நிகழ்த்தப்பட்ட சாகசம் என தெரிவித்துள்ளது.