பயணிகளுக்கிடையில் சண்டை! அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!

விமானத்தில் பயணித்த பயணிகள் இருவருக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக விமானம் தரையிறக்கப்பட்ட சம்பவம் ஒன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் (Los Angeles) நகரிலிருந்து நியூ யோர் நோக்கி புறப்பட்ட விமானத்தில் பயணித்த டாம் (Tom) என்ற பயணிக்கும் அவரது அருகில் அமர்ந்திருந்த சக பயணிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

டாமின் இரு கைகளையும் இழுத்து இறுகபிடித்து அவரது கைகளை கடித்துள்ளார் சக பயணி. இதனால் வலி தாங்க முடியாத டாம் அலறியுள்ளார். அவருக்கு முதலுதவி வழங்க வந்த மருத்துவரையும் அந்த பயணி தாக்கியுள்ளார். மேலும் ஒரு கட்டத்தில் வலி தாங்க முடியாத பயணி விமானத்தை நிறுத்துமாறு கூறியுள்ளார். உடனே லாஸ் ஏஞ்சல்ஸ்ஸில் விமானம் தரையிறக்கப்பட்டது.  பின்னர் பாதிக்கப்பட்ட பயணிக்கு மருத்துவ உதவிகள் செய்து சிறிது நேரம் கழித்து விமானம் மீண்டும் புறப்பட்டது.

ஆனால் தகராற்றிற்கு காரணமாக இருந்த பயணிமேல் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

cUGkEaVH625.0.560.350.160.300.053.800.668.160.90-(1)