செய்தியாளர்களிடம் அவர் பேசியது,
எதற்காக இந்த திடீர் டெல்லி மீட்டிங்,
14-வது நிதிக்குழுவில் மாநிலத்துக்கான நிதி ஒதுக்கீடு செய்யும்போது தமிழகத்துக்கான ஒதுக்கீடு 4.9% இருந்து 4% ஆக குறைந்தது.
இதனால் ஆண்டுக்கு கிட்டத்தட்ட ரூ.5 ஆயிரம் கோடி இழப்பு. எனவே 14-வது நிதிக்குழு ஒதுக்கீட்டில் ரூ.2 ஆயிரம் கோடியை தமிழகத்துக்கு சிறப்பு நிதியாக தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளேன்
மேலும் மீனவர்கள் பற்றி அவர் கூறியது,
கன்னியாகுமரியில் ஒகி புயலில் காணாமல்போன 297 படகுகள் மற்றும் 3,139 மீனவர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டு உள்ளனர். நேற்று 33 மீனவர்கள் 3 படகுகளில் வந்துள்ளனர் என்பது சமீபத்திய கூடுமான தகவல்..
அது மட்டுமின்றி மாலத்தீவில் சில படகுகள் மீட்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. கிடைத்த புள்ளிவிவரப்படி மாயமானவர்கள் இன்னும் 40 படகுகளில் சுமார் 400 பேர் இருக்கலாம் என கருதப்படுகிறது.
தேர்தல் பற்றி..
ஜனநாயகத்தை நம்பி நாங்கள், அவரோ (டி.டி.வி.தினகரன்) பணநாயகத்தை நம்பி.மக்கள் ஜனநாயகத்தையே நம்புவார்கள்..
கருத்துகணிப்பு என்ன கூறுகிறது..?
அவர் என்ன கொடுத்தாலும் டெபாசிட் வாங்க முடியாது. அவர் வெற்றி பெறுவார் என்பது கருத்துக்கணிப்பு அல்ல, என கூறியுள்ளார் அமைச்சர்..