கர்நாடகாவில் அரச அதிகாரிகளின் வீடுகளில் ஊழல் :சோதனை!

கர்நாடகாவில் உள்ள அரச அதிகாரிகளின் வீடுகள் அலுவலகங்களில் ஊழல் தடுப்பு படை சோதனை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

modi-fortவருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார்கள் என்னும் பெயரில் 11 அரச அதிகாரிகள் வீடுகளில் ஊழல் தடுப்பு படை சோதனை நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.நடத்திய சோதனையில் பல கோடிகள் மதிப்புள்ள சொத்து குவிப்பு தெரியவந்துள்ளது.

இதனடிப்படையில் கர்நாடகாவில் உள்ள அரச அதிகாரிகள் ஊழல் மோசடி குறித்து வந்துள்ள புகார்களை அடுத்தே இவ் சோதனை இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.அதன்படி பெங்களுர் மாநகராட்சி பசவனகுடி உதவி பொறியியலாளர் தியாகராயன்,பெங்களுர் நகர வளர்ச்சி திட்ட உதவி இயக்குனர் சசிகுமார்,கர்நாடகா தொழிழாளர் இணை இயக்குனர் வாசன்னா,துமகூர் பொதுப்பணித்துறை பொறியியலாளர் யெகதீஸ்,அங்கோலா சிறியநீர் பாசனத்துறை பொறியியலாளர் பாண்டுரங்காசிக்பள்ளாத்துர் சிறியநீர் பாசனத்துறை பொறியியலாளர் ஹேமந்த,மண்டியா மாவட்ட பஞ்சாயத்துறை அதிகாரி சந்திரகாந்,சிவமெக் உதவி பொறியியலாளர் மல்லப்பா,பல்லாரி அதிகாரி சேஹவலி,பெலகவலி கனகபுர் உதவி பொறியியலாளர் சுரேஸ் நாயக்,மங்களுர் அதிகாரி மிரண்டா ஆகியோரின் வீடுகள் அலுவலங்களிலே சோதனை நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில் இவர்களின் பெயரில் உள்ள சொத்து குவிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக ஊழல் தடுப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.