லண்டனின் Harrow நகரில் அமைந்துள்ள சுரங்கப்பாதை ரயில் நிலையத்தின் படிக்கட்டுகள் பயணிகளுக்கு இடையூறாக இருப்பதால் இலங்கைத் தமிழரான சமூக ஆர்வலர் ( kuha kumaran) குக குமரன் என்பவர் இது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியினை முன்னெடுத்துள்ளார்.
South Harrow tube station(40 steps), West Harrow and Rayners Lane (both having 33 steps) மற்றும் North Harrow station (40 steps) ஆகிய சுரங்கப்பாதை ரயில் நிலையங்களிலேயே மக்கள் அதிக பாதிப்பை சந்திக்கின்றனர்.
குறிப்பாக, ஊனமுற்றோர், பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் அரசாங்கத்திற்கு மனு அளிப்பதற்கு முன்வரவேண்டும் என சமூக ஆர்வலர் குக குமரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது,
“மக்களுக்கு இடையூறாக இருக்கும் இந்த முக்கிய பிரச்சனையை அரசியல்வாதிகள் கவனத்தில் கொண்டு இதற்கு தீர்வு காண வேண்டும், நம் சமுதாயத்தில் பாதிக்கப்படக்கூடிய முதியவர்கள் மீது நாம் அக்கறை காட்ட வேண்டும்.
இன்று நம் நாட்டில் நாம் அனுபவித்துக்கொண்டிருக்கும் ஜனநாயக சுதந்திரத்திற்கு இந்த மக்களும் ஒரு காரணம் ஆவார்கள், ஆனால் இது போன்ற போக்குவரத்துக்களால் அவர்கள் பாதிப்படைவதால் அவர்களால் முழுமையான வாழ்க்கையை வாழ முடியாது.
அன்றாடம் இந்த பாதைகளில் பயணிக்கும் மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சினை குறித்து கேட்டறிந்துள்ளேன். மேலும் சில மக்களுக்கு உடல் ரீதியான காயங்களும் ஏற்பட்டுள்ளன, ஒரு ஜனநாயக நாட்டில் இவ்வாறு நடப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
இதனால், பொது மக்களாகிய நாமும் இது குறித்து அரசாங்கத்திற்கு மனு அளித்து இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் எனக் கூறியுள்ளார்.
லண்டன் மேயர் Sadiq Khan லண்டனை சுற்றியுள்ள சுரங்கப்பாதை ரயில் நிலையங்களில் படிக்கட்டுகள் இல்லாத பாதைகள் அமைப்பதற்கு சுமார் 200 மில்லியன் பவுண்ட்டினை முதலீடு செய்வதற்கு திட்டமிட்டிருந்தார்.
2019 முதல் 2020ஆம் ஆண்டிற்குள் Harrow நகரில் படிக்கட்டுகள் இல்லாத பாதைகள் அமைக்க திட்டமிடப்பட்டது, ஆனால் கவுன்சிலர்கள் இந்த பிராந்தியத்தில் மற்ற நிலையங்களுக்கு நீடிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
இதனால் மேயர் Sadiq Khan மற்றும் போக்குவரத்து செயலாளர் Chris Grayling ஆகியோருக்கு கடிதம் எழுதப்பட்டதை அடுத்து அவர்கள் anonsPark, Hatch End, Headstone Lane, Kenton மற்றும் Northolt Park ஆகிய பகுதிகளில் போக்குவரத்தினை மேம்படுத்துவதாக உறுதியளித்துள்ளனர்.
இந்த பகுதிகள் மட்டுமின்றி North Harrow, Northwick Park, Queensbury, Rayners Lane, South Harrow, SudburyHill மற்றும் West Harrow ஆகிய பகுதிகளிலும் போக்குவரத்தினை மேம்படுத்த முடிவு செய்துள்ளனர்.
Harrow குடியிருப்பாளர்கள் மற்றும் Harrow – க்கு வருகை தரும் பயணிகள், அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு, குறிப்பாக முதியவர்களுக்கான பயணத்தை எளிதாக்குவது, ஊனமுற்றோர் அல்லது பிள்ளைகளுடன் பயணம் செய்பவர்களின் நலன் கருதி இந்த மனுவில் கையெழுத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.