குழந்தையின் எதிர்கால செயற்திறனைப் பாதிக்கும் விடயங்கள்!

குழந்தைகளின் விடயத்தில் பெற்றோர்களே சில தவறுகளை செய்கின்றார்கள். பெற்றோர்களை பொறுத்தவரையில் குழந்தைகள் அதிகமாக சாப்பிட வேண்டும் என்ற ஒரு கருத்து மட்டுமே அவர்களிடம் நிலவுகின்றது. அதற்காக குழந்தைகள் உணவு போதும் போதும் என்று கூறினாலும் பெற்றோர்கள் அதிகளவிலான உணவினை குழந்தைக்கு திணிக்கின்றார்கள். இது குழந்தையின் எதிர்கால செயற்திறனை பாதிக்கின்றது.

குழந்தையின் எதிர்கால செயற்திறனைப் பாதிக்கும் விடயங்கள்!

குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் அதிகமாக Chocolate, icecream என கொடுத்தால் அது அவர்களுக்கு இரவு உணவுக்கு முன்னர் எப்படி ஜீரணமாகும். அதற்காக மாலை நேரத்தில் இவற்ரை வழங்க வேண்டாம் என்பதில்லை. உணவுகளை சரியான நேர இடைவெளியிலும் சரியான நேரத்திற்கு கொடுக்க வேண்டியதும் அவசியம் ஆகும். அந்த நேரத்திற்கு இடையில் நீங்கள்அதிக கலோரி உணவுகள் அல்லது செரிமானமாக தாமதமாகும் உணவுகளை கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

10 வயது குழந்தைக்கு நாள் ஒன்றிற்கு 1000 கலோரிகள் மட்டும் போதுமானது. 300 முதல் 400 கலோரிகள் வரை அவர்களது இவ்வாறான உணவுகள் மற்றும் நொறுக்கு தீனிகளின் மூலமாகவே பூர்த்தியடைந்துவிடும். பெரும்பாலான பெற்றோர்களுக்கு ஒருவேளைக்கு தனது குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவின் அளவு எவ்வளவு என்பதே தெரிவதில்லை. அவர்களுக்கு தேவைக்கு அதிகமாக உணவை கொடுப்பதால் உடல் எடை அதிகரிப்பு மற்றும் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றது.

குழந்தையின் எதிர்கால செயற்திறனைப் பாதிக்கும் விடயங்கள்!

வீட்டில் சமைக்கப்படாத எந்த ஒரு உணவும் ஆரோக்கியமானது அல்ல. குழந்தைகளுக்கு வெளியில் இருந்து உணவுகள் அல்லது குளிர்பானங்களை வாங்கி கொடுத்தால் அவற்றில் உள்ள விபரத்துண்டை கவனமாக படிக்க வேண்டியது அவசியம். பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிமாக சர்க்கரை இருக்கும் எனவே அதில் கவனம் தேவை.