தமிழரசுக்கட்சி ஏமாற்றி விட்டனர் சித்தார்த்தன் குற்றச்சாட்டு

உள்ளுராட்சி தேர்தல் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சி இடையில் அண்மையில் இடம்பெற்ற முரண்பாடுகளை தீர்க்கும் வகையில் பங்காளி கட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து அண்மையில் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

Tharmalingam-Sitharthan-yaalaruviகலந்துரையாடலின் இறுதியில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள் தமக்குள் இருந்த பிரச்சனைகள் சுமூகமாக தீர்க்கப்பட்டுள்ளதாகவும் ஒன்றாக இணைந்து தேர்தலை எதிர்கொள்வதாகவும் அறிவித்திருந்தனர்.

அன்றை கூட்டத்தில் ஆசனப்பங்கீடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டிருந்தது.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கூட்டமைப்புக்குள் ஏற்பட்ட தீர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டபோதும் தமிழரசுக்கட்சி ஏமாற்றிவிட்டதாக புளொட் கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக அதில் வலி மேற்கு பிரதேச சபை, முதல் இரண்டு வருடங்கள் புளொட்டுக்கும் இறுதி இரண்டு வருடங்கள் தமிழரசுக்கட்சிக்கும் என இணக்கம் காணப்பட்டதுடன், மானிப்பாய் பிரதேச சபை முதல் இரண்டு வருடம் தமிழரசுக்கட்சிக்கும் இறுதி இரண்டு வருடங்கள் புளொட்டுக்கும் என இணக்கம் காணப்பட்டு 3 கட்சி தவைர்களும் கையெழுத்திட்டிருந்தனர்.

இந்த நிலையில் நேற்று இது குறித்து மீண்டும் பங்காளி கட்சிகளுடன் கலந்துரையாடுவதற்காக மாட்டீன் வீதியில் அமைந்துள்ள தமிழரசுக்கட்சி அலுவலகத்தில் கூட்டம் கூட்டபட்டது.

அதில் தமிழரசுக்கட்சி வலி மேற்கு பிரதேச சபையை முழுமையாக தாம் எடுத்துக்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதனால் ஏமாற்றம் அடைந்த புளொட் அமைப்பு தாம் இதற்கு இணங்க முடியாது எனவும், தமிழருசுக்கட்சியின் அதிகாரத்தை வைத்தே இதை எடுத்துக்கொண்டுள்ளீர்கள் என தெரிவித்து கூட்டத்தில் இருந்து முறுகல் நிலையில் வெளியேறியுள்ளனர்.

இது குறித்து புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தனை தொடர்பு கொண்டு கேட்ட போது, எமக்கு சபைகள் பிரித்து கொடுப்பது தொடர்பில் முன்னர் கலந்துரையாடப்பட்ட போது இணக்கம் தெரிவித்திருந்தனர்.

பின்னர் தமது அதிகாரத்தை பயன்படுத்தி அதை மீண்டும் பறித்துக்கொண்டுள்ளனர். இதில் எமக்கு எந்த உடன்பாடும் இல்லை உறுதிமொழி வழங்கி ஏமாற்றி விட்டனர் என குற்றம்சாட்டியுள்ளார்.

மீண்டும் மூண்டது முரண்பாடு

111-telo_CI  தமிழரசுக்கட்சி உறுதிமொழி வழங்கி ஏமாற்றி விட்டனர் சித்தார்த்தன் குற்றச்சாட்டு 111 telo CI

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பாக, இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் தமிழீழ விடுதலை இயக்கத்துக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை, தோல்வியில் முடிவடைந்துள்ளதாகத் தெரியவருகின்றது.

தமிழரசுக் கட்சிக்கும் தமிழீழ விடுதலை இயக்கத்துக்கும் இடையிலான சந்திப்பு, இலங்கை தமிழரசுக் கட்சி அலுவலகத்தில், நேற்று (13) மாலை இடம்பெற்றது.

மன்னார் நகரசபையை டெலோவுக்கு வழங்கப்பட்ட போதும், அதனை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு வழங்கப்பட்ட வேண்டும் என்ற கோரிக்கைக்கு அமைவாக, இந்த அவசர சந்திப்பு இடம்பெற்றது.

நீண்ட நேரமாகப் பேச்சு வார்த்தை இடம்பேற்ற போதும், மன்னார் நகரசபையின் ஆட்சி, இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு வழங்க வேண்டும் எனறக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

எனினும், குறித்த கோரிக்கையை தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) முற்று முழுதாக நிராகரித்ததோடு, டெலோவுக்கே வழங்க வேண்டும் எனக் கோரிக்கை முன்வைத்தது. இதனால், பேச்சுவார்த்தை, தீர்வின்றி நிறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.