ஹிந்தியில் கங்கனா ரணாவத் நடித்த குயின் படம் மிக பெரிய ஹிட் அடித்து பல விருதுகளை பெற்றது. அந்த படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ரீ மேக் செய்கிறார்கள். அதில் தமிழ் ரீமேக்கில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார்.
மேலும் அவர் ஆவ் என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். இவருக்கு வயதாகிவிட்டது என்றும் இவருக்கு படங்கள் கிடைப்பது குறைந்துவிட்டது என்றும் பலரால் பரப்பப்பட்டாலும். இவர் பல படங்களில் நடித்துக்கொண்டே தான் இருக்கிறார். மேலும், குயின் தமிழ் ரீமேக்கான பாரிஸ் பாரிஸ் படத்தில் பல விருதுகளை எதிர்பார்த்து காஜல் நடித்துக்கொண்டிருக்கிறார்.
மேலும், ஒரு பேட்டியில் காஜல், மற்றவர்கள் கூறுவதை பற்றி எனக்கு கவலை இல்லை நான் நடிக்கும் பாரிஸ் பாரிஸ் படத்தின் வெற்றி என்னை மீண்டும் கோலிவுட் சினிமாவில் நிலைநாட்டும் என்று கூறினார்.