கனடா பிறம்ரன் தமிழ் மூத்தோர் சங்கத்தின் நத்தார் தினவிழா பிறம்ரன் கோர் மிடோ வாசிகசாலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை மாலை 6.30 மணிக்கு சங்கத்தலைவர் திரு.டேவிட் இராசரத்தினம் தலைமையில் கனடிய தேசிய கீதம்,தமிழ்த்தாய் வாழ்த்து என்பவற்றுடன் ஆரம்பமானது.
தலைவர் தனது தலைமை உரையிலும் வரவேற்புரையிலும்.சங்க வளர்ச்சியையும் சொல்லி வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் றாஜ்கிறேவால், நகரசபை உறுப்பினர்கள்,அங்கத்தவர்கள் அனைவரையும் வரவேற்றுப்பேசினார்.பாராளுமன்ற உறுப்பினர் தலைவரின் தலைமைத்துவத்தை சங்கம் பெற்றதுவரவேற்றுப்புக்ககுரியது என்று கூறினார்.
கலைகலாச்சார நிகழ்ச்சிகளாக லைன் டான்ஸ்,யேசுவைப் போல் நல்ல நண்பன் யாருமில்லையே பாடலுக்கான நடனம், சமையலறை இசைக்குழு,கீபோட் வாத்திய இசை,பாலன் பிறப்பு அரங்க காட்சி நாடகம் என்பன முதியோரின் சிறப்பு நிகழ்வாக கண்டு கொள்ளப்பட்டது.
சமுகமளித்தவர்களுக்கு சிற்றுண்டி,சீட்டிளுப்பும்,பரிசில்களுடன் நத்தார் பப்பாவின் வாழ்த்தும் வழங்கப்பட்டது.இறுதியாக நன்றி நவில்தலுடன் விழா இனிதே முடிவுற்றது.