மகிந்த அணியில் இருந்து தாவி இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்!

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறியானி விஜேவிக்கிரம இன்று உள்ளூராட்சி, மாகாணசபைகள் இராஜாங்க அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்.

சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இன்று காலை இந்தப் பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் முன்பாக, சிறியானி விஜேவிக்கிரம, இராஜாங்க அமைச்சர் பதவியை ஏற்று சத்தியப் பிரமாணம் செய்தார்.

Sriyani Wijewickrama sworn

மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணியில் இருந்த சிறியானி விஜேவிக்கிரம கடந்தவாரம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து அவருக்கு ஆதரவு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.