கனடாவில் மனைவியை அடித்து கொலை செய்த இலங்கை தமிழர் கைது

கனடாவில் மனைவியை காயப்படுத்தி கொலை செய்த தமிழரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

நாட்டின் ஒன்றாறியோ மாகாணத்தில் உள்ள மால்வெர்ன் நகரில் வசித்து வருபவர் கதிர்காமநாத சுப்பையா (45). இவர் மனைவி ஜெயந்தி சீவரத்னம் (46).

ஜெயந்தி நேற்று நகரில் உள்ள எம்பிர்ங்கம் பகுதியில் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளார்.

இதை பார்த்த அவசர உதவி குழுவினர் ஜெயந்தியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு ஜெயந்தி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த தகவலை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

உயிரிழந்த ஜெயந்தியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அதிகளவில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக அவர் உயிரிழந்துள்ளது தெரியவந்தது.

இதையடுத்து ஜெயந்தியை கொலை செய்ததாக அவரின் கணவர் சுப்பையாவை பொலிசார் கைது செய்துள்ள நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.