உடல் எடை 203 ஐ தொட்டது! தினமும் 13 லீட்டர் கொக்கோகோலா குடித்த இளைஞன்!

21 வயதுடைய ஷேன் டிரென்ச் என்னும் இளைஞர் ஒரு கொக்கோ கோலா பிரியர். நாளொன்றுக்கு 13 லீட்டர் அளவிலான சோடாவை குடிப்பதை பழக்கமாக கொண்டுள்ளார். குடிப்பதற்கு தண்ணீரிற்கு பதிலாக கொக்கோ கோலாவையே குடித்து வந்துள்ளார். இதன் விளைவாக உடல் பருமன் அதிகரித்து பல இன்னல்களை சந்தித்துள்ளார்.

5a32ab4588913-IBCTAMILஅவருடைய உடல் எடை 203 கிலோவை அடைந்தது. அதனால் அவரால் நடப்பது நீண்ட நேரம் நிற்பது போன்ற பிரச்சினைகளை சந்தித்தார். அதனைத்தொடர்ந்து ஷேன் மருத்துவரை நாடியுள்ளார்.
ஷேனை பரிசோதித்த மருத்துவர்கள் கொக்கோ கோலா குடிப்பதை அவர் நிறுத்தாவிட்டால் இன்னும் சில நாட்களிலேயே அவர் இறந்துவிடுவார் என தெரிவித்துள்ளனர்.

எனவே மருத்துவர்களின் நிபந்தனைக்கேற்ப ஷேன் கோலா குடிப்பதை நிறுத்தியுள்ளார். அதன் விளைவாக அவரின் உடல் எடை 69 கிலோ குறைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த வருடம் ஷேனின் இரைப்பையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தபோதும் அவர் தனது கடின உடற்பயிற்சியால் அறுவை சிகிச்சை செய்யாமலேயே தனது எடையை 127 கிலோ வரைக்கும் குறைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.