செல்பி மோகத்தால் சிரித்துக் கொண்டிருந்த தோழிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

இந்தோனிசியாவில் இளம் பெண் ஒருவர் தோழிகளுடன் செல்பி எடுத்த போது, இரயிலில் சிக்கி உயிரிழந்ததால், அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்தோனிசியாவில் இரயில்கள் செல்லும் தண்டவாளத்தில் நான்கு பெண்கள் செல்பி எடுத்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது இந்த பெண்கள் இரயில் வரும் சமயத்தில், இரயிலுக்கு சில மீற்றர் தூரம் இருக்கும் படி செல்பி எடுக்க முயன்றுள்ளனர்.

அப்போது அந்த நான்கு பேரில் இருந்த ஒரு பெண் தன்னுடைய செல்பி ஸ்டிக்கை வைத்து, செல்பி எடுக்க, முயற்சித்துள்ளார். இதில் இவர்களுக்கு பின்னால் இருந்த Ely Hayati(16) என்ற பெண் சற்று நிமிர்ந்து புகைப்படத்திற்குள் வர முயற்சித்த போது, இரயிலின் அடிப்பகுதி அவரை தட்டியுள்ளது.

இதனால் அவர் இரத்தக் காயங்களுடன் உயிருக்கு போராடியுள்ளார்.

ஆனால் அருகில் இருந்த தோழிகள் முதலில் இதைக கண்டு சிரித்துவிட்டு, அதன் பின் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதில் Ely Hayati-யின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள், பாதிப்புக்குள்ளான பெண்ணுக்கு, தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது, இதனால் மூளை தெரியும் அளவிற்கு உள்ளது, தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்பி மோகத்தால், இளம் பெண் ஒருவர் இரயிலில் சிக்கியதால், அவ்வழியே பொதுமக்கள் செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.