நெதர்லாந்தில் கத்தி குத்து! இருவர் பலி! பலர் படுகாயம்!

நெதர்லாந்தில் நடைபெற்ற கத்தி குத்து சம்பவத்தில் 2 பேர் பலியானதுடன் மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

5a335e1372f2e-IBCTAMILநெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்சார்டமில் உள்ள மாஸ்ட்ரிச் நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் நேற்று மாலை மக்கள் கூடியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரம் அடைந்த நபர் ஒருவர் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து அங்கிருந்தவர்களை தாக்கியுள்ளார்.

குறித்த தாக்குதல் சம்பவத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியதுடன் மேலும் பலர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். தகவல் அறிந்த பொலிசார் விரைந்து வந்து குற்றவாளியை கைது செய்ததுடன் இறந்தவர்களின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் படுகாயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்துள்ளனர். மேலும் சம்பவம் குறித்து பொலிசார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.