முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவை பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதை தவிர்க்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடைவுத்தரவை மேலும், நீடித்துள்ளது.
இந்த இடைக்காலத் தடை எதிர்வரும் ஜனவரி மாதம் 25 ஆம் திகதிவரை அமுலில் இருக்கும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டீ.ஏ. ராஜபக்ஷ ஞாபகார்த்த அருங்காட்சியக நிர்மாணிப்பின் போது அரச பணத்தை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ சந்தேக நபராக கருதப்படும் நிலையில், அவர் தாக்கல் செய்த ரீட் மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே இந்த இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.