பீகாரில் தனது அண்ணியை திருமணம் செய்து வைத்த காரணத்தால் மனமுடைந்த 15 வயது மாணவன் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அவரது அண்ணி பொலிசில் நடந்தவை குறித்து வாக்குமூலம் அளித்துள்ளார்.
Gaya மாவட்டத்தின் Paraiya கிராமத்தை சேர்ந்த மகாதேவ் தாஸ்(15) என்ற சிறுவன், தன்னை விட 10 வயது மூத்தவரான தனது அண்ணி ரூபி தேவியை தனக்கு திருமணம் செய்து வைத்த காரணத்தால், தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டான்.
இதுகுறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து அண்ணி ரூபி தேவியிடம் விசாரணை நடத்தியதில், அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
2009 ஆம் ஆண்டு மகாதேவ் தாஸ்ஸின் மூத்த சகோதரன் சதிஷ் தாஸை எனக்கு திருமணம் செய்து வைத்தனர், அப்போது மகாதேவ்வின் வயது 9.
அவர்கள் வீட்டில் 3 ஆண் குழந்தைகள், இதில் மகாதேவ் தான் கடைசி பையன், மகாதேவ்க்கு முந்தைய சகோதரன் மனிஷ் தாஸ்க்கும் திருமணம் முடிந்துவிட்டது.
2013 ஆம் ஆண்டு சதிஷ் வேலை பார்த்த இடத்தில் மின்சாரம் தாக்கி இறந்துபோனார், இதனால் நான் எனது குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்று, அங்கேயே வாழந்துவிடலாம் என முடிவு செய்தேன்.
ஆனால், எனது மாமனார் சந்தீஷ்வரர் தாஸ் இதற்கு அனுமதிக்கவில்லை, எங்களது வீட்டிலேயே வாழ வேண்டும் என்றும் மகாதேவ்க்கு 15 வயது ஆனவுடன் அவனை உனக்கு திருமணம் செய்து வைக்கிறேன் என கூறினார்.
எனது குழந்தைகளுடன் சேர்த்து மகாதேவையும் ஒரு குழந்தையாகத்தான் வளர்த்து வந்தேன், இதற்கிடையில் மகாதேவ்க்கு 15 வயது நெருங்கியவுடன், என்னை திருமணம் செய்துகொள்ளும்படி கேட்டுள்ளனர்.
ஆனால் அதற்கு மறுத்த அவன் மேற்கொண்டு தான் படிக்க வேண்டும் என ஆசைப்படுவதாக கூறியுள்ளான்.
இதனை ஏற்க மறுத்த தந்தை, சொத்தினை பிரித்துக்கொடுக்க முடியாது என பிரச்சனை செய்துள்ளார், எனது தாயும் மகாதேவக்கு என்னை திருமணம் செய்து வைப்பதில் உறுதியாக இருந்தார்.
இந்நிலையில் தான் டிசம்பர் 11 ஆம் திகதி எங்கள் திருமணம் நடைபெற்றது, திருமணம் முடிந்த அன்று எனது சகோதரி மகாதேவிடம் பேசியுள்ளார், ஆனால் பதில் எதுவும் தெரிவிக்க மறுத்த மகாதேவ் தனது அறைக்குள் சென்றுவிட்டான்.
நான் எனது இரு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு எனது அறைக்குள் சென்றுவிட்டேன், அவனது அறைக்குள் சென்ற அவன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டான் என கூறியுள்ளார்.