கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினை மேலும் அபிவிருத்தி செய்து, வெளிநாட்டவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் புதிய திட்டமொன்றினை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளது.
அதனடிப்படையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் புதிதாக 4 நட்சத்திர ஹோட்டல்களை நிர்மானிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விமான நிலையத்திற்கு சொந்தமான காணிகளிலேயே மேற்குறித்த நிர்மாணிப்பு பணிகள் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விமான பயணிகளுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் சிறந்த, தரம்வாய்ந்த சேவையினை வழங்கும் முகமாகவே குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
தற்போதைய நிலையில் சுற்றுலாப்பயணிகளின் வருகை இலங்கையில் அதிகரித்துள்ளதால், கட்டுநாயக்க விமான நிலையத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.