தமிழக அகதி முகாமில் விஷமருந்தி உயிரிழந்த யாழ் இளைஞன்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞரொருவர் தமிழகத்தின் இராமநாதபுரம் அகதி முகாமில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தமிழக அகதி முகாமில் விஷமருந்தி உயிரிழந்த யாழ் இளைஞன்

குறித்த இளைஞன் நேற்று விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

உயிரிழந்த இளைஞன் அவரது பெற்றோருடன் இந்தியாவிற்கு இடம்பெயர்ந்து சென்றிருந்த நிலையில், அவரது பெற்றோர் மீண்டும் ஸ்ரீலங்காவிற்கு திரும்பி வந்து யாழ்ப்பாணம் – திருநெல்வேலியில் வசித்து வருகின்றார்கள்.

தமிழகத்தின் இராமநாதபுரம் அகதி முகாமில் தங்கியிருந்த இந்த இளைஞன் மூன்று வருட டிப்ளோமா பாட நெறியை கற்று வந்துள்ளார்.

இளைஞனின் சடலத்தை விசாரணைகளுக்கு பின்னர் ஸ்ரீலங்காவிற்கு கொண்டுவர உதவுமாறு அவரது உறவினர்கள் இந்திய துணை தூதரகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனினும், அந்த இளைஞன் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தமிழக பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

rat-poison-death