தகவல் தொழில் நுட்பம் வளர்ந்து விட்ட இந்த காலகட்டத்தில் பல்வேறு பிரச்சனைகளை நாம் எதிர்கொண்டு வருகிறோம்.
சில விஷயங்கள் நமக்கு தெரிந்து நடக்கிறது. ஆனால்., ஒரு சில விஷயங்கள் நமது கண்ணனுக்கு தெரியாமல் நடைபெற்று நமக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
அந்த வகையில்., ஆபாச இணைய தளங்களை பார்ப்பதினால் சில பிரச்சனைகள் நமக்கு ஏற்படுகின்றது.
இணைய தளத்திற்கு சென்று விட்டால் போதும்.., ஆபாச படங்களை எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் இலவசமாக உங்களால் காணமுடியும்.
ஆனால்.., எந்த ஒரு பொருளையும்.., அல்லது ஒரு சேவையையும் இலவசமாக யாரும் கொடுக்க மாட்டார்கள். அப்படி இருக்கும் போது இது மட்டும் எப்படி சாத்தியம் என்கின்ற கேள்வி உங்களுக்கு எழுகிறதா..?
செல்போன் நிறுவனங்கள் தங்களுக்குள் ஏற்பட்டுள்ள போட்டியினால்., அந்த ஆபாச இணையத்தளங்களுக்கு விளம்பரங்களை கொடுக்கின்றன.
ஆபாச இணைய தளங்களில் வருவது.., வெறும் விளம்பரம் மட்டும் அல்ல. அந்த விளம்பரத்தை கிளிக் செய்தால் அதிலிருக்கும் வைரஸ் உங்களது செல்போனை தாக்கும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்..?
சில நேரங்களில் நீங்கள் ஏதாவது விளம்பரத்தை கிளிக் செய்திருப்பீர்கள். ஆனால்., அந்த விளம்பரம் முழுவதும் ஓபன் ஆகாமல் PAGE NOT FOUND என்று வரும். இல்லை என்றால் சம்மந்தம் இல்லாத இணையதளம் ஓபன் ஆகும்.
அந்த நேரங்களில் ஏற்படும் வைரஸ் தாக்குதலினால் செல்போன் செயல்பாட்டின் வேகம் குறைந்து விடும்.
சாப்ட்வேர் மூலம் அதனை சரி செய்ய நினைக்கும் போது., 1000 ரூபாயில் இருந்து 2000 வரை செலவு ஆக வாய்ப்புள்ளது.
ஒரு சில நேரங்களில்., செல்போன் சர்வீஸ் கடையில் இருப்பவர்கள்., இதை சரி செய்தாலும்.., சரியாக இருக்காது.., வேறு ஒரு போன் வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறிவிடுவார்கள்.
நீங்கள் கண்டிப்பாக வேற செல்போனை வாங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவீர்கள். இதுதான் கார்ப்பரேட் வியாபார தந்திரம். இதனால்தான் ஆபாச படங்கள் உங்களுக்கு இலவசமாக கிடைக்கிறது.
இனிமேலாவது எச்சரிக்கையாக இருங்கள்…!!