தங்களது பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போக்குவரத்துத் துறை தொழிலாளர்கள் அனைவரும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை மாநகரில் 40 சதவீதப் பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஊதிய உயர்வு, ஓய்வூதியப் பலன்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் எட்டு மண்டலங்களுக்கு உட்பட்ட போக்குவரத்துக் கழக ஊழியர்கள் நேற்று முதல் 48 மணி நேரக் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையிலுள்ள பல்லவன் இல்லத்தில் மட்டுமே 3 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் எப்போதும் வழக்கமாக 3 ஆயிரத்து 250 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், தற்போது ஊழியர்களின் போராட்டத்தின் காரணமாக போதிய ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் இல்லாததால் ஓய்வுபெற்ற ஊழியர்களைக் கொண்டு தான் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இத்தகைய போராட்டத்தால் சென்னையில் 40 சதவீத பேருந்துகளை இயக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.
பேருந்துகள் மிக குறைவான அளவில் இயங்குவதால் அனைத்து பேருந்துகளிலும் மக்கள் கூட்ட நெரிசல் காணப்படுகிறது.