மனிதனை விழுங்கிய மலைப்பாம்பு – இந்தோனேசியாவில் சம்பவம்!

அண்மையில் இளைஞன் ஒருவரை, மலைப்பாம்பொன்று விழுங்கிய சம்பவமானது, இந்தோனேசியாவின் சுலாவெசி தீவுப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மனிதனை விழுங்கிய மலைப்பாம்பு - இந்தோனேசியாவில் சம்பவம்!

இந்தோனேசியாவின் சுலாவெசி தீவுப்பகுதியிலேயே தன் மனைவி மக்களை வழி அனுப்பிவிட்டு வீடு திரும்பிய அக்பர் எனும் இளைஞனையே, மலைப்பாம்பொன்று விழுங்கியுள்ளது. இவர் தனது வீட்டிலிருந்து மாலை இருள் நேரத்தில் தனது பனை மரத்தோப்பிற்கு சென்றுள்ளார்.

அப்போது,பின்னால் சென்ற மலைப்பாம்பானது, அக்பரின் முதுகு பகுதியை தாக்கி உயிருடன் விழுங்கியுள்ளது.அக்பரை சில நாட்களாக காணவில்லை என தேடிய ஊர் மக்கள் அவரின் ஒரு காலணி மாத்திரம் கிடப்பதையும் அதற்கருகில், ஓர் மலை பாம்பு அசைய முடியாத நிலையில் கிடப்பதையும் கண்டுள்ளனர்.

இதன் பின்னர் பாம்பின் வயிற்றை கிழித்து, அக்பரின் சடலத்தை மீட்டுள்ளனர். மலைப்பாம்புகள் உயிருடன் எந்த இரையையும் விழுங்காமல் இரையை நெருக்கி இரத்த ஓட்டத்தை நிறுத்தி விழுங்கும் என்பதே இது வரை காலமும் கண்டறியப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளாகும்.

எனினும் இவ்வாறாக உயிருடன் ஒருவரை மலைப்பாம்பு விழுங்கியிருப்பது இதுவே முதல் முறை ஆகும்.இச்சம்பவத்தால் ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். குறித்த மலை பாம்பு சுமார் 23 அடி நீளமுடையது என்பது குறிப்பிடத்தக்கது.