கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தாமரை கோபுரம் திடீரென பச்சை நிறத்தில் ஒளிர ஆரம்பித்துள்ளது.
இதுவரை தாமரை நிறத்தில் ஒளிர்ந்த கோபுர வெளிச்சம், திடீரென பச்சை நிறத்திற்கு மாறியுள்ளது.
உள்ளுராட்சி தேர்தல் காரணமாக இவ்வாறு திடீரென பச்சை நிறத்திற்கு விளக்கு ஒளிர்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
உலகில் பச்சை நிறத்தில் தாமரை மலர்ந்துள்ள ஒரே நாடு இலங்கை என கின்னஸ் சாதனை படைக்ககூடும் விமர்சிக்கப்பட்டு வருகின்றது.
கடந்த மஹிந்த ஆட்சியின் போது சீனாவின் உதவியுடன் தாமரை கோபுரம் நிர்மாணிக்கப்பட்டது.
தற்போது அதன் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த வருட ஆரம்பத்தில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசியாவில் மிகவும் உயர்ந்த கட்டடங்களில் ஒன்றாக இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தாமரை கோபுரம் பெயரிடப்படவுள்ளது.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்சியின் சின்னம் தாமரை பூ என்பது குறிப்பிடத்தக்கது.